குளியாப்பிட்டி, கந்தானேகெதர பகுதியில் கிணறு ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த இருவர் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்தனர்.
கஹடபிட்டியவத்த பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம், இருவரில் ஒருவர் கிணற்றில் விழுந்துள்ள நிலையில் அவரை காப்பாற்ற மற்றொருவர் கிணற்றுக்குள் சென்ற போது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.




