பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்-கிளி.அரச அதிபர் வலியுறுத்து!

நாட்டில் ஏற்பட்டுள்ள  பொருளாதார ரீதியான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின்  பங்களிப்பு மிகவும் அவசியம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (29-07-2022) ஐக்கிய நாடுகள் பெண்கள் வலையமைப்பு  chrysalis   நிறுவனத்தினால் வியாபார சந்தையும் அனுபவ பகிர்வும் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.     

தொடர்ந்து உரையாற்றுகையில்,

       
கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் -19 காரணமாக எமது பொருளாதார நடவடிக்கைகள்  முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும்  தொழில் முயற்சிகளும்  வியாபார நடவடிக்கைகள் மற்றும் சுய தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை காணப்படுகின்றது.

 ஆகவே தொழில் முயற்சியாளர்களாகிய நீங்கள் உங்களுடைய தொழில் முயற்சிகளை கைவிடாது அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் அது எமது  மாவட்டத்திற்கும்  எமக்கும் நாட்டுக்கும் ஏற்படுகின்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு உங்களுடைய பங்களிப்புகளும் மிக மிக அவசியமானது என்பதை கூறிக்கொள்ள விரும்புகன்றேன்  எனவும் அவர் மேலும் குறிபிபட்டுள்ளார்.

 பெண் தொழில் முயற்சி அவர்களின் வியாபார அபிவிருத்திக்கான உதவி திட்டத்தின் கீழ் வியாபார சந்தையும் அனுபவப் பகிர்வும்   இன்று பகல்  (29-07-2022) ஐக்கிய நாடுகள் பெண்கள் வலையமைப்பு  chrysalis   நிறுவனத்தினால்  முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விற்பனையும் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த தொழிற்சந்தையில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்  மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரி chrysalis   நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி  மற்றும்  அரச அரச சார்பற்ற நிறுவனங்களின்  பிரதிநிதிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply