9வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் சிம்மாசன உரையோடு ஆரம்பம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை காரணமாக பொது நிறுவனங்களுக்கான குழு மற்றும் பொதுக் கணக்குகளுக்கான குழு போன்ற 50 க்கும் மேற்பட்ட குழுக்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply