மனோ விடைபெற்றாலும் வீறு நடைபோடும் கூட்டணி- திகா கூற்று!

” தமிழ் முற்போக்கு கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர். மனோ கணேசன் அல்ல, நான் விலகினால்கூட கூட்டணி பலமாக பயணிக்கும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளிக்கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.

‘சூரியன்’ வானொலியில் ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பில் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரத்திடம் வினவியபோது,

” தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து கூட்டணி மட்டத்தில் மனோ கணேசன் கலந்துரையாடவில்லை. சிலவேளை, வயதாகிவிட்டதால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

யார் விலகினாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி பலமாக பயணிக்கும். சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர்.” – என்று குறிப்பிட்டார் திகாம்பரம்.

பிறசெய்திகள்

Leave a Reply