
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களாக அலைபேசிகளைத் திருடிய மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 43 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23,24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





