
காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்நாட்டு டி20 லீக் போட்டியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 லீக்கில் பாமிர் சல்மி மற்றும் பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த மைதானத்தில் தீடீர் என்று வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் முக்கிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த விபத்தில் கையெறி குண்டு வெடித்துள்ளது. இதனால் ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தியதாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் வாராந்திர விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரன் கூறுகையில், வெடிகுண்டு வெடித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதில் நான்கு பார்வையாளர்கள் காயமடைந்து உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் கூறினார். மேலும் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
பிறசெய்திகள்





