உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லவுள்ள இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

இலங்கை ஜூனியர் தடகள அணியினர், கொலம்பியாவில் நடைபெறும் உலக தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, அதிகாரிகள் உரிய நேரத்தில் விமான டிக்கெட்டுகளை வழங்கத் தவறியதால், திட்டமிட்டபடி செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த போட்டியில் 7 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

“இலங்கை ஜூனியர் அணியும் அவர்களது பெற்றோர்களும் டோரிங்டனில் இரவோடு இரவாக தங்கி அவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்மட்ட தடகள அதிகாரிகளின் தீர்வுகள் மற்றும் ராஜினாமாக்களை அவர்கள் நாடுகின்றனர்.

அதேவேளை உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பிற்காக காலிக்கு செல்ல அணிக்கு முறையான விமான டிக்கெட்டுகள் மறுக்கப்பட்டன” என்று விளையாட்டு ஊடகவியலாளர் அஞ்சனா களுஆராச்சிச்சி ட்வீட் செய்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply