உடும்பு இறைச்சியை பதுக்கி வைத்திருந்த இளைஞன் கைது!

சம்பூர் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடிய ஆறு கிலோ கிராம் உடும்பு இறைச்சியை வீட்டில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேக நபர் சட்டவிரோதமாக காட்டில் வேட்டையாடிய உடும்பு இறைச்சியை வீட்டில் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது உடும்பு இறைச்சி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்டுத்தப்படவுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply