போராட்டக்காரர்களை ஒடுக்க அவசர நிலை அமுல்படுத்தப்படவில்லை – பிரதமர்!

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்றும், நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காகவும் அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொஸ்கம – பொரலுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொஸ்கம, பொரலுகொடவில் அமைந்துள்ள தனது தந்தையான பிலிப் குணவர்தனவின் நினைவிடத்திற்கு இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிறசெய்திகள்

Leave a Reply