நாட்டில் ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

பொருளாதார நெருக்கடி காரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக, ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனை, வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, போன்றவற்றினால் ஆடை உற்பத்தி துறையானது பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் மற்றும் மின்சார நெருடிக்கடியினால் உரிய நேரத்தில் தங்களது உற்பத்திகளை வழங்கமுடியாது போயுள்ளதோடு, அதனால் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply