ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் நம்பிக்கையை விட மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் அப்போதுதான் ஆட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இன்று இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கங்களின் கீழ், இளம் சமூக ஆர்வலர்கள் துரத்தி, கேள்விக்குட்படுத்தப்பட்டு, அவசரகால சட்டத்தின் கீழ் கடத்திச் செல்லப்படுகின்றனர்.
இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் மேலும் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டின் பிம்பம் மேலும் வீழ்ச்சியடையும், பொது ஜன பெரமுனாவின் நம்பிக்கையை வென்றெடுப்பதுடன், மக்களின் நம்பிக்கையையும் ஜனாதிபதி வென்றெடுக்க வேண்டும். ஏனெனில் பெரமுன மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்தார்.
மேலும், சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான அழைப்பு தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்





