ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவர் கைது

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்கள் தங்காலை – ரண்ண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் அவர்கள் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு மேலதிகமாக பல கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட மின்சார உபகரணங்கள், உந்துருளி மற்றும் மிதிவண்டி உள்ளிட்டவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply