ராஜபக்சக்கள் என்னை பழிவாங்கினார்கள் -தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன்  ஒருவருடத்தின் பின் விடுதலையானதும் தெரிவிப்பு

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன்  ஒருவருடத்தின் பின் விடுதலை   

(கனகராசா சரவணன்)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை சட்டமா அதிபரின் ஆலோசனையில்  வெள்ளிக்கிழமை (29)  ஏறாவூர்  சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா  காசு பிணையிலும் விடுவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை இணையதளங்களில் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி  தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர்  இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்நகர் பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத்  வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவரை ஒரு இலச்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு ரொக்கப் பிணையிலும் பிணையில் விடுவித்துள்ளார்.  

Leave a Reply