எரிபொருள் மோசடிகள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

கொழும்பு, ஓகஸ்ட் 01

சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்தல் மற்றும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் முறையிட முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை 0742 123 123 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் QR குறியீடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply