காலிமுகத்திடல் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்

காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சுமார் 40 வயதுடைய ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply