IMF இடமிருந்து நிதியைப் பெற பணியாளர் மட்ட பேச்சு வார்த்தைகள் வெற்றியடைவது அவசியம்: ரணில்

கொழும்பு, ஓகஸ்ட் 01

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியினைப் பெறுவதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கு பணியாளர் மட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியடைவது அவசியம் எனவும், இந்த நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு பல மாதங்கள் ஆகலாமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

THE WALL STREET சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசியல் ஸ்தீரதன்மை காணப்பட்டிருக்குமாயின் கடந்த ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையினை கைச்சாத்திட்டிருக்க முடியுமென  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply