6 இலட்சம் இலங்கையர்களுக்கு உணவு இல்லை! வெளியான அதிர்ச்சித் தகவல்

உயர் பணவீக்கம் காரணமாக சுமார் 630,000 இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக உணவுத் திட்டம் இதனைச் சுட்டிக்காட்டுவதாகவும், அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருள், உரம் போன்றவற்றைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் இலங்கையர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் 30ஆம் திகதி ஆரம்பமான சர்வதேச தலைமைத்துவ மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போர்ச் சூழல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் மீண்டு வருமென இலங்கையர்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் எதிர்பார்த்தது.

ஆனால், தற்போது நாம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம். அந்த நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மையும், மக்களின் வாழ்க்கை சீர்குலைவுகளும் தாங்க முடியாதவை.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply