ஏனைய மாவட்டங்களைவிட யாழ்ப்பாணத்திலேயே ‘கியூ.ஆர்’ முறை வெற்றி!

இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே ’கியூ.ஆர்’ நடைமுறை வெற்றியளித்திருக்கின்றது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ’கியூ.ஆர்’ நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில், 6 ஆயிரம் லீற்றருக்கும் அதிகளவான பெற்றோல்’கியூ.ஆர்’ நடைமுறைக்கு ஏற்ப வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏனைய மாவட்டங்களில் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தகவல்களுக்கு அமைவாக இதுவரையில் தினமும் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை விட மேலதிகமாக 5 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, வடமராட்சி, சங்கானை பிரதேச செயலர் பிரிவுகளில் மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு 6 ஆயிரத்து 600 லீற்றர் பெற்றோல் தினமும் மேலதிகமாக விநியோகிக்கப்படவுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply