பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன: ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு

மலையகம்,ஓகஸ்ட் 01

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பல முக்கிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக பிரதான ஆறுகளின் தாழ்வான பகுதிகளுக்கு அருகிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply