ஜனாதிபதி இல்லத்திற்கு தீ வைத்தமை தொடர்பில் மூவர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த மூவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 5 மற்றும் மடபாத ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம் தீவைத்து எரிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஜனாதிபதியில் இல்லம் மற்றும் அவரது தனிப்பட்ட நூலகமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றாமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply