லஞ்ச வழக்கில் சிக்கிய நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரானார்

கொழும்பு, ஓக. 2:

துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான லஞ்ச வழக்கில் இருந்து அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி குழு அவரை நேற்று விடுவித்திருந்தது.

இதனையடுத்து அவர் இன்றைய தினம் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply