திருமலை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம்!(படங்கள் இணைப்பு)

திருகோணமலை 5ம் கட்டை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கிவ் ஆர் முறை மூலமான எரிபொருள் விநியோகம் சீராக இடம் பெற்று வருகிறது. மக்கள் ஒரே வரிசையில் இருந்து பெற்றோலினை பெற்று வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார் உள்ளிட்ட வாகனங்கள் முறையே சீராக ஒரே வரிசையில் சுமூகமான பெற்றோல் விநியோகம் இடம் பெற்றதை அவதானிக்க முடிந்தது. பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் ஆரவாரமின்றி நெருக்கமின்றி சீரான விநியோகம் இடம் பெறுகின்றது.

குறித்த விநியோக நடவடிக்கை நேற்று மாலை (01) இடம் பெற்றது.
5ம் கட்டை ஐஓசி எரிபொருள் நிரப்பு உரிமையாளர் கீர்த்தி யின் மேற்பார்வையில் சிறப்பாக விநியோக நடவடிக்கை இடம் பெற்றன. 

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பல நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ஆனாலும் இங்கு ஒரே வரிசை பின்பற்றப்பட்டு கிவ் ஆர் பரிசோதிக்கப்பட்டு சீரான பெற்றோல் விநியோகம் இடம் பெற்றதை அவதானிக்க முடிந்தது.

பிறசெய்திகள்

Leave a Reply