யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருப்பதிக்கு பாதயாத்திரை!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருப்பதிக்கான பாதயாத்திரை
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தைச் சேர்ந்த பக்தர்கள் மன்னார் மடு தேவாலயத்திற்கான பாதயாத்திரையை இன்றைய தினம் காலையில் ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வீதி வழியாக நாவற்குழி ஊடாக கேரதீவு சங்குப்பிட்டி பாலத்தைக் கடந்து பூநகரி ஊடாக மடுவுக்குச் செல்கின்றனர்.

இந்த வாரம் நடைபெற உள்ள மடுமாதாவின் வருடாந்தப் பெருநாளில் பங்கேற்பதே தமது நோக்கமெனக் கூறினார்கள்.

சென்ற 2020,2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் – 19 பெருந்தொற்று நோய் காரணமாக மடுமாதா கோயிலின் வருடாந்தப் பெருவிழா மிக அடக்கமாகவே நடைபெற்றது.

இந்த வருடம் இயல்பு நிலை பெருமளவு திரும்பியுள்ள காரணத்தால் அதிக பக்தர்கள் பங்கேற்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply