ரணில்- கூட்டமைப்புக்கு இடையில் நாளை சந்திப்பு

கொழும்பு, ஓகஸ்ட் 02

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையில் நாளை சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply