கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான புகையிரத சேவை ரத்து

பதுளை,ஓகஸ்ட் 02

கடும் மழை காரணமாக நாவலப்பிட்டிக்கும் ஹட்டனுக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்றும் (2) நாளையும் (3) அந்த மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6.00 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த புகையிரதமும், நாளை (3) காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த மூன்று புகையிரதங்களும், நாளை காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவிருந்த மூன்று புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது மேலாளர் மேலும் கூறினார்.

Leave a Reply