மக்கள் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளே சிக்கித் தவிக்கின்ற நிலையிலே இங்கே இராணுவமயமாக்கம் என்பது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலி கிழக்கு தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவி்த்தார்.
இன்றைய நிலைமையில் வடமராட்சியிலுள்ள வல்லையில் இராணுவத்தினர் உணவகங்களையும் கடைகளை அமைத்து வருகின்றனர். அதேவேளை மக்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் சிக்கித்தவிக்கும் இவ்வேளை வல்லையில் தற்போது இராணுவத்தினர் உணவகங்களையும் கட்டடங்களையும் அமைக்க வேண்டிய தேவை என்ன எழுகின்றது என்பது தொடர்பில் கேள்வியெழுப்புகின்றோம்.
தற்போதைய நிலையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் நிலையில் இங்கே தொடர்ச்சியாக இராணுவ மயமாக்கலும் இராணுவ செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை கண்டிக்கத்தக்கது.
அதேவேளை தெற்கைப் பொறுத்தவரையில் அப்பாவி இளைஞர் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்களின் மீதான தாக்குதல்கள் இராணுவமயமாக்கத்தினுாடக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் இராணுவத்தின் மூலமான அனுகுமுறை மூலம் தீர்வு காணமுடியும் என குறிப்பாக முன்னைய கோட்டபாய தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருந்தது. அரச நிர்வாகங்களை காட்டிலும் நிர்வாக அதிகாரிகள் என்பவற்றிற்கு புறம்பாக இராணுவ அணுகுமுறையின் வாயிலாக தீர்வு காணலாம் என ராஜபக்சவினர் முயற்சித்தனர்.
அதேவேளை வலிகாமம் வடக்கில் உள்ள மக்களின் காணிகள் இதுவரை இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமல் உள்ளது. அவற்றிலே இராணுவத்தினர் விவசாயய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை இராணுவத்தின் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் முடிவுக்கு வரவேண்டும்.
இராணுவமயமாக்களை உடனடியாக நிறுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை கோருகின்றோம் என குறிப்பிட்டார்.
பிறசெய்திகள்





