
யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதடைந்த காரணத்தினால் தமிழகத்திற்குள் நுழைந்ததாக தெரிவித்த இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் சரகம், சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் இருந்து தொலைபேசி மூலம் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் வந்ததான தகவலின் பேரில் விசாரணை செய்ததில், சக்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான படகில் 31.07.2022 ஆம் திகதி மதியம் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புறப்பட்ட இன்பசிட்டி மற்றும் பலாலி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரும் தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் திகதி 03.00 மணியளவில் இந்திய சர்வதேச எல்லை அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது படகு கவிழ்ந்ததில் இருவரும் பிளாஸ்டிக் வெற்றுக் கானை பிடித்து உயிர் தப்பியுள்ளனர்.
இதன்போது நேற்று காலை 07.00 மணிக்கு சிறுதலைக்காடு கடற்கரைக்கு வந்தவர்களை, படகில் ஏற்றிக் கொண்டு சென்றதாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் முதல்தடவை வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
பிறசெய்திகள்





