கண்ணீர் புகை குண்டுகளுடன் நபரொருவர் கைது

கொழும்பு, ஓகஸ்ட் 3

ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது காணாமல் போனதாக தெரிவிக்கப்படும், கண்ணீர் புகை குண்டுகள் இரண்டினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய-ஒபேசேகரபுர பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இவ்வாறு கண்ணீர் புகை குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply