உரிய காலப்பகுதியில் உரமின்மையால் நெற்செய்கை பாதிப்பு! விவசாயிகள் கவலை

திருகோணாமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல திணைக்களத்திக்குட்பட்ட வன்னியனார்மடு, புளியடிகுடா, பக்கிரான்வெட்டை முதலான பகுதிகளில் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை சிறுபோக வேளாண்மை செய்கைக்கு போதியளவு உரம், கிரிமிநாசினி கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

2400 ஏக்கர் பரப்பில் இம்முறை சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த முறை பசலை கிருமி நாசினி முதலான பொருட்கள் கிடைக்காததனால் போதியளவு விளைச்சல் கிடைக்கவில்லை.

இம்முறை மேற்கொள்ளப்பட்ட சிறுபோக வேளாண்மை செய்கையிலும் உரிய முறையில் பசளை, கிருமி நாசினிகள் கிடைக்கவில்லை.

பெரும் போக வேளாண்மை செய்கை மேற்கொள்வதற்காவது உரிய நேரத்தில் உரிய உரம் மற்றும் கிருமி நாசினிகளை தந்தால் விவசாயிகள் வாழ முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply