திருடப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது!

ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு கண்ணீர்ப்புகை குண்டுகளை வைத்திருந்த மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நேற்று (02) இராஜகிரிய ஒபேசேகரபுரவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஒபேசேகரபுர அருணோதய மாவத்தையில் வசிக்கும் 28 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது பொலிஸ் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (03) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply