டீசலுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக கிடைக்கெப்பெற்ற இரகசியத் தலவலுக்கமைய டீசலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வண்ணாத்திவில்லு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட 10 கட்டை நாகமடுவ பகுதியில் 200 லீற்றர் டீசலுடன் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேக நபரின் வீட்டை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது வண்ணாத்திவில்லு 10 கட்டை நாகமடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply