
கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும், இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்





