சம்பூரில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சம்பூர் கடற்கரையிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று , சடலத்தை பார்வையிட்டதுடன் , சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் – இரால் குழி பகுதியைச் சேர்ந்த 07 வயது ஆண் பிள்ளையினதும், 02 வயது பெண் பிள்ளையினதும் தந்தையுமான யுவான் விக்டர் விரேன் (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மூதூர் – கங்கை பாலத்தின் கீழ் உள்ள கடல் பகுதியில் காற்றால் அள்ளுண்டு சென்ற படகொன்றை மீட்பதற்காக நீந்தி சென்றச் வேளை கடந்த (31) ஆம் திகதி நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

குறித்த நபரைத் தேடும் பணி கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சடலம் இன்றைய தினம் சம்பூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply