20 வீதத்தால் குறைவடைந்துள்ள மின்சார அலகுகளின் பாவனை

இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் மின் பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தி வந்த போதிலும், தற்போது 38 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மாதங்களாக நிலவும் மின்வெட்டு மற்றும் நுகர்வோரின் குறைந்தளவான மின்பாவனையே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply