இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் உள்ளிட்ட் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சிவரூபன் இணைந்து இன்று ஊடக சந்திப்பு ஒன்றை யாழ் ஊடக அமையத்தில் நடத்தி இருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன்,
அண்மைக்காலமாக ஜனநாயக ஒடுக்குமுறைகள் மேலோங்கியிருக்கின்ற இந் நாட்டிலே. கோட்டா கோ கம போராட்டம் உச்சம் பெற்று மக்கள் தங்களுடைய அபிலாசைகளை சரியான பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்று ஆட்சியாளர்களை முன்னிறுத்தி செய்த போராட்டங்களில் முன்னின்று நடத்தியவர்களை தற்போதைய ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கம் போராட்டகாரர்களை ஒடுக்கி அவர்களது பதவி மோகத்திற்காக அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனநாயகவாதிகளை கைது செய்து மக்களை போராட்டம் செய்து தமது கதிரைகளுக்கு ஆபத்து வராத வகையில் செயற்படுவதாக எண்ணி போராட்டங்களை நசுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜோசப் ஸ்டாலினின் கைது என்பது ஒரு அப்பட்டமான அராஜகமான அரச பயங்கரவாதத்தை காட்டி நிற்கின்றது. காரணம் காலிமுகத்திடல் போராட்டத்தின் 50வது நாள் நிகழ்வில் அவர் கலந்து கொண்டதை காரணம் காட்டியும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட உத்தரவு இருப்பதாகவும் அவர் செரண்டிப் சுற்றுவட்டத்தால் அவர் பிரயாணம் செய்தார் என்பதை போலியாக காரணம் காட்டி தாழிற்சங்கவாதியாக மனித உரிமை செயற்பாட்டளரான ஜோசப் ஸ்டாலின் கைது மூலம் இந்த நாட்டை ஒரு அச்சுறுத்தலாம் என்ற என்னத்திற்காக இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றது.
செரண்டிப் சுற்றுவட்டத்தின் மூலதமாக தான் ஜோசப் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லவேண்டிய நிலை இருக்கின்றது. இந்நிலையில் அவருக்கு வீட்டிற்கு செல்ல மாற்றுப் பாதை வேறெதுவும் இல்லை. அதேவேளை இதனை வைத்து தான் ஜோசப் ஸ்டாலினை பழவாங்குகின்ற அல்லது இந்த போராட்டத்தினை அடக்க முனைகின்ற ஆட்சியாளர்கள் இதனை ஒரு துரும்புச்சீட்டாக எடுத்து அதன் மூலமாக நாட்டை அச்சுறுத்தலாம் என நினைக்கின்றார்கள்.
அதேவேளை ஜோசப் ஸ்டாலின் கைதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதேவேளை நாங்கள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் முதற்கட்ட எதிர்ப்பு நடவடிக்கையாக பாடசாலை இடைவேளை நேரத்தில் ஒன்றுகூடி கைதுக்கு எதிராக இன்று கவனயீர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இந்த அரசாங்கம் மிகப் பாரிய விளைவை சந்திக்கவேண்டி வரும் என எச்சரிக்கின்றோம். அதேவேளை இதனுடைய தார்ப்பரியத்தை அரசாங்கம் மிகவிரைவில் விளங்கிக் கொள்ளும் என்ற செய்தியையும் நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
கோட்டா கோ கம 50வது நாள் போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக தான் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அதேவேளை இதேபோராட்டத்தில் கலந்து கொண்ட தாதியர் சங்கத்துடைய சமன் ரட்ணப்பிரிய தற்போது ரணில் விக்கிரசிங்கவின் தொழிற்சங்க ஆலோசகராக இருக்கின்றார். அவரை கைது செய்யாத இந்த அரசாங்கம் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக கைது செய்கின்றதென்றால் இது ஒரு அரச பயங்கரவாதம் என்று தான் கூறுகின்றோம். எனவே அரசாங்கம் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றோம் என தெரிவித்தார்.
பிறசெய்திகள்





