மலையகத்தில் தொடர் மழை காரணமாக வீதியில் மண் சரிவு.

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மோகினி எல்ல பகுதிகளில் மண் திட்டு இன்று காலை சரிந்து விழுந்தது உள்ளது.

இதனால் நல்லதண்ணி மஸ்கெலியா போக்குவரத்து துண்டிக்க பட்டு உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

கடும் காற்று காரணமாக பாரிய மரங்கள் சரிந்து விழுந்தது உள்ளது என மஸ்கெலியா நல்லதண்ணி பொலிசார் தெரிவித்தனர்.

கடும் பணி மூட்டம் இப்பகுதியில் உள்ளன.இதனால் வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply