தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் செல்வம் செழித்தோங்கவும் மாங்கல்ய பலம் நிலைக்கவும் திருமணம் நடக்கவும் பெண்கள் பக்தி சிரத்தையுடன் விரதத்தை ஆரம்பித்தனர்.
ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும்.
அந்த வகையில் ஆடி 20ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை (05.08.2022) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது.
தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் வரலட்சுமி விரத பூஜையை காலையில் ஆரம்பிக்கப்பட்டது.
மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்து மகாலட்சுமியை வேண்டி ஆவாஹணம் செய்து வழிபட்டனர் .
ஆலய பிரதம குருக்கள் வண பிரசாந்த சர்மா தலைமையில் நடைபெற்ற பூசையில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர் .
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.நன்றி….. அன்னையின் அருள் பெற்று வாழ்க வளமுடன் உலகமுழுவதும் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நேற்று 5 ம் திகதி காலை முதல் மாலை வரை பூஜைகள் நடைபெற்று விளக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பிற செய்திகள்



