தமிழர்களுடைய ஒத்துழைப்பு இன்றி நாட்டினை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பது கடினம்- மாவை சேனாதிராஜா!

புளொட் அமைப்பின் 10 ஆவது தேசிய மாநாட்டில் பல்வேறுபட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுருக்கின்றன.இந்த தீர்மானங்கள் எவ்வளவு விரைவாக நடைமுறைக்கு வரும் இந்த கட்சி நடவடிக்கைளை மேற்கொள்ளும் என்பது ஒரு கேள்வியாக உள்ளது. வெறுமனே பத்திரிகையில் வைத்துக்கொள்ளாமல் அந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் .

ஒரு பாதிக்கப்பட்ட தேசிய இனத்தினுடைய விடுதலையினை பற்றி பேசக்கூடிய ஒரு இனத்திற்கு இருக்கக்கூடிய முக்கிய விடயமாகும் .பௌத்த,சிங்கள பெரும் இனவாதத்தால் அடக்கி ஒடுக்கபடுகின்ற எமது தனித்தன்மையை இழந்து போகக்கூடிய ,அதற்காக நீண்ட காலமாக போராட்டத்தினை நடாத்திய ,பல இலட்ச உயிர்களை அதற்காக அர்ப்பணித்த ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம்.

எமது இனத்தை ,மொழியை ,கலாசாரத்தை,பண்பாட்டினை ,இந்த மண்ணில் எங்களுடைய இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்காக இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனம்.

தற்போது நாடு கடனாளியாக மாறி இருக்கின்றது .IMF இடம் இன்னமும் கடன் தொகையினை கேட்டு நிற்கின்றது.இனி வருகின்ற ஓரிரு வருடங்களில் இலங்கையின் கடன் தொகை 100 பில்லியன்களை கடந்து விடும் என்பது தான் இன்றைய நிலைமை ,இதனை ரணில் விக்கிரமசிங்கவாலோ அல்லது வேறொருவராலோ தீர்த்து வைக்க முடியுமா என்பது தான் கேள்வி .

எமது நாட்டில் எரிவாயு,டீசல் ,அத்தியாவசிய பண்டங்கள் என அனைத்தும் இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளது இதற்கும் உதவிகளே தேவையாக இருக்கின்றது ,அதேபோன்று கடன் கொடுப்பதற்கும் வெளிநாட்டு செலவாளிகள் தேவையாக இருக்கின்றன.இவற்றை எல்லாம் ஈடு செய்ய வேண்டும் என்றால் நாடு அதற்கான திடமான அரசியல் ,பொருளாதார சூழலை கொண்டதாக இருக்க வேண்டும் ,அவ்வாறு இல்லை .

அவ்வாறான சூழ்நிலையில் ஒரு அந்நியச்செலாவணியை கொண்டு வரக்கூடிய பக்குவமுள்ள ஒரே ஒரு தலைப்பாக இருக்கக்கூடியவர்கள் தமிழர் தரப்பினரே ,ஆகவே தமிழர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இவர்களால் இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொண்டு வருவது என்பது இலகுவான காரியம் அல்ல.

மிக பயங்கரமான ஊழல்களை செய்த கொழும்பை நம்பி நிச்சயமாக ஈழத்தமிழர்களோ ,இந்திய தொழில் அதிபர்களோ இங்கே முதலீடுகளை கொண்டு வர முடியாது .அந்தவகையில் வட,கிழக்கு மாகாணங்களுக்கு முதலீடுகளுக்கான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் .அதனை பாதுகாப்பதற்கான அதிகாரங்களை கொடுக்க வேண்டும் .எனவே இந்த முதலீடுகளால் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் ,எமது இருப்பினையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இன்றைக்கு செய்யப்பட வேண்டியவை என்ன? எமது குறுகிய கால திட்டங்கள் என்ன?அதிகாரங்களை கையில் எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிற பொழுது அதை எடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?இவற்றை கூட்டாக பேசி செய்வதற்கான ஐக்கியபடுத்தப்பட்ட குறைந்த பட்ச நிலைமைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை உடனடியாக பேச வேண்டிய கால கட்டம் இது .என்றார்

பிற செய்திகள்

Leave a Reply