கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் பழைய எலுவங்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் செய்கை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி காணப்பட்டதுடன், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் நிரம்பி வழிந்ததுடன், நீர்த் தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டன.
வான் கதவுகள் திறக்கப்பட்டமையால், நீர் நெல் வயல் நிலங்களினூடாக மேவி பாய்வதால் நெற்பயிர் செய்கை, மரக்கறி செய்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடன்களைப் பெற்றும், உரமும் இல்லாமலும் நெற்செய்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள், 10 – 20 நாட்களைக் கொண்ட நெற்பயிர்களே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.





