குழந்தைகள் காப்பகத்தில் ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனாத் தொற்று!

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் பண்டாரவெல சுஜாதா செவன குழந்தைகள் காப்பகத்தில் 11 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு கொரோனாத் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பண்டாரவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் இன்று இந்த அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 11 குழந்தைகளுக்கும், 6 பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள், உணவகத்தில் பணி புரியும் இருவர் மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளிட்ட தரப்பினருக்கு தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply