தீக்கிரையானது கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை மருத்தகம்

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை மருந்தகத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு மின்னொழுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அன்றையதினம் மருத்துவசேவைகள் தடையின்றி நடைபெற்றிருந்தது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார், தடயவியல் பிரிவினர் மற்றும் பிராந்திய சுகாதார சேவையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave a Reply