புத்தளம் – தில்லையடி பகுதியில் டீசலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தேக நபரொருவர் புத்தளம் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டீசலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பதுக்கி வைத்திருந்த 35 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தில்லையடிப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட டீசலையும் நாளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்



