சிட்னி தொடர்மாடி குடியிருப்பிலிருந்து சவுதி அரேபிய பெண்கள் சடலமாக மீட்பு!

அவுஸ்திரேலிய சிட்னி தொடர்மாடி குடியிருப்பில் இருந்து இரு சவுதி அரேபிய பெண்கள் சடலமாக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெளியில் எவரும் அவர்களது குடியிருப்பினுள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், இது பெரும் மர்மமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரணமானவர்களின் உடல்களில் எந்தவிதமான வெளிக்காயங்களும் இல்லை என தெரிவித்திருக்கும் காவல்துறையினர், இந்த மரணங்களுக்கான காரணத்தை கண்டறிய முடியாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,குடியிருப்பில் உள்ள இரு வேறு அறைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டமையால் இவர்களின் மரணம் அசாதாரண தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மரணங்கள் குறித்த விசாரணைகளை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் பொதுமக்களின் உதவியினை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply