யாழில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு!(படங்கள் இணைப்பு)

வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனமும் ஹெல்திலங்கா நிறுவனமும் இணைந்து நடாத்தும் கிராமத்தில் உள்ள வேலைத்திட்ட குழுவினருக்கான மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கானது இன்றையதினம் சங்கானையில் உள்ள வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தில் நடைபெற்றது.

இதன்போது வீட்டு பொருளாதாரத்தை மகிழ்ச்சியான குடும்ப சூழலுடன் எவ்வாறு கட்டியெழுப்புவது தொடர்பான பயிற்சிநெறியும் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சிநெறியின் வளவாளராக ஹெல்திலங்கா நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த கருத்தமர்வில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தொடர் செயற்பாடாக வீட்டுத்தோட்டத்துக்கான ஊக்குவிப்பாக பயன்தரு விதைகளும் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது.

வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செ.குமாரசிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவதாசன், வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் வலிகாமம் மேற்கு பிரிவில் உள்ள இளைஞர் யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply