ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான்!

இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள ஜப்பானிய பிரதமர், இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், அனைத்து கடனாளிகளுக்கும் நியாயமான சுமையை பகிர்ந்து கொள்வதன் மூலம் கடனை மறுசீரமைப்பது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறுகிறார்.

“சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” ஒன்றை அடைவதற்கான ஒத்துழைப்பு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதமர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply