யாழ். மாவட்டத்தில் வான்கதவுகள் திறப்பு: அங்கஜன் நடவடிக்கை!

யாழில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு, யாழ். மாவட்டத்தின் பெரும்போக நெற்பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கும் பொருட்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மறவன்புலவு, நாவற்குழி பெரும்போக நெற்செய்கையைப் பாதுகாக்கும் பொருட்டு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அறிவுறுத்தலுக்கமைய, செம்மணி மற்றும் தொண்டைமானாறு நீரேந்தும் பிரதேசங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, கடல்நீர் மட்டம் உட்புகாத வண்ணம் பாதுகாப்பதற்கும் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply