காதலால் ஏற்பட்ட விபரீதம்; காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்!

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் இளம் இராணுவ கமாண்டோ ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாயத்துள்ளார்.

தனது காதலை கேலியான எண்ணிய காதலியின் நடத்தையால் மனம் உடைந்த 21 வயது இராணுவ கமாண்டோ ஒருவரே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாயத்ததாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜாஎல, ஏகல, மடம தோட்டத்தை சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். எனினும் இளைஞனின் காதலை கேலியாக எடுத்துக் கொண்டதாக தகவல் கிடைத்தமையினால் மனமுடைந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

உயிரிழப்பதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கயிற்றை தூக்கிட்டுக்கொள்ளும் இடத்தில் கட்டி தற்கொலை செய்துக் கொள்வதற்கு தயார் என காதலிக்கு வட்ஸ்அப் ஊடாக காணொளி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இளைஞனின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply