வேலை நிறுத்தம் காரணமாக 20 சதவீத சேவைகள் இயக்கப்படும்: இரயில் பயணிகள் அதிக இடையூறு!

வேலை நிறுத்தம் காரணமாக 20 சதவீத சேவைகள் மட்டுமே இயங்குவதால் இரயில் பயணிகள் அதிக இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.

45,000க்கும் மேற்பட்ட இரயில் தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் விதிமுறைகள் தொடர்பான சர்ச்சையில் வெளியேறுவதால், பிரித்தானியாவில் பாதி இரயில் வழித்தடங்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மூடப்படும்.

சில இடங்களில் சேவைகள் இருக்காது. மேலும் அவை இயங்கும் இடங்களில் இரண்டு வேலைநிறுத்த நாட்களிலும் ரயில்கள் 07:30 முதல் 18:30 வரை மட்டுமே இயக்கப்படும்.

இதனிடையே, அத்தியவசியம் மற்றும் தேவைப்பட்டால் மட்டுமே இரயிலில் பயணிக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது கோடைகால வேலைநிறுத்தங்களின் தொடரில் சமீபத்தியது மற்றும் லண்டனில் உள்ள லோர்ட்ஸில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு செல்வோர், திருவிழாவிற்கு செல்பவர்களின் பயணத் திட்டங்களை மாற்றும்.

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் மொத்தம் 4,300 சேவைகள் இயங்கும் என்று நெட்வொர்க் ரெயில் தெரிவித்துள்ளது.

Leave a Reply