கொடிகாமம் பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் இரவுவேளை திடீரென வெடிகள் கொளுத்தப்பட்டதால் அந்தப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர் .
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது . இரவு 7.45 மணியளவில் துப்பாக்கியால் சுடுவது போன்று திடீரென வெடியோசைகள் கேட்டதால் பிரதேச மக்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகினர் .
அந்தப் பகுதியில் உள்ள முதி யவர்கள் , நோய்வாய்ப்பட்டவர்கள் , குழந்தைகள் பெரும் அசௌகரியங் களுக்கு முகம்கொடுத்தனர் .
இந்த விடயம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து . பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார் .
அனுமதி பெறாது இவ்வாறு வெடிகள் கொளுத்தக் கூடாது என்று அறிவுறுத்திய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வெடிகளைக் கொளுத்துவதற்குத் தடையும் விதித்தார் .
பிற செய்திகள்



