
இந்தியாவின் பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று காலமானார்.
தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார்.
காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970- ஆம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார்.
குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன்.
இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை அண்மையில் பெற்றார்.
இந்தநிலையில் உடல்நலக்குறைவால் தனது 77ஆவது வயதில் இன்று தனது வீட்டில் காலமாகியுள்ளார்.
அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



